அதிரை கடற்கரைத் தெருவில் இந்த ஆண்டு கந்தூரி நடத்த வேண்டாம் என முடிவு

Editorial
0
அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில்
ஹஜ்ரத் ஹாஜா ஷேக் அலாவுதீன் திஸ்தி  (ஒலி) அவர்களின் கந்தூரி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கந்தூரி தொடர்பாக கடற்கரைத்தெரு தர்கா நிர்வாக கூட்டம் தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
அதில், தற்போது நிலவி வரும் கொரோனா நோயின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கீழ்காணும் 2 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

1. ஊர்வலம், நிகழ்ச்சிகள் , கடைகள் மற்றும் தெரு வசூல் கிடையாது.

2. 11 நாட்களும் குர்ஆன், ஹத்தம் பாத்திஹா மட்டும் ஓதப்பட உள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவை  தலைவர்  எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப்  அவர்களையும் மற்றும் கடற்கரைத்தெரு ஜமாஅத்தார்களையும் சந்தித்து விளக்கமளித்துள்ளனர். இதற்கு தர்ஹாக்கள் பேரவை மற்றும் ஜமாத்தினர் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்ததாக தர்ஹா கமிட்டி அறிவித்துள்ளது.

பொறுப்புணர்வுடன் இந்த முடிவை எடுத்த தர்ஹா கமிட்டிக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்கள். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த கந்தூரி நிகழ்ச்சியை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நடத்தாமல் அதற்கான செலவுகளை வேறு பல நற்காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதும் நமது வேண்டுகோள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...