அதிரையில் சிறப்பாக நடைபெற்ற BEACH UPDATE குழுமம் நடத்திய மார்க்க அறிவுப் போட்டியின் பரிசளிப்பு விழா

வெளிநாடு வாழ் கடற்கரைத்தெரு சகோதரர்களால் பீச் அப்டேட் குழுமம் சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான ஆன்லைன் மார்க்க அறிவு திறன் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக போட்டியில் வெற்றிப்பெற்ற பிள்ளைகளுக்கும் கலந்துக்கொண்ட பிள்ளைக்களுக்கும் பரிசளிப்பு விழா கடற்கரைத்தெரு பெண்கள் மதரஷாவில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி நிர்வாக தலைவர் VMA அஹமத் ஹாஜா தலைமையில்,  கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி நிர்வாக பெருமக்கள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வை கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி இமாம் மௌலவி M.G..சஃபியுல்லாஹ் அன்வாரி தொகுத்து வழங்கினார்கள்.

நஸீர் அவர்களின் இனிய கிராஅத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், ஹாஃபிழ் A.முஹம்மத் ஜாபிர் கீதம் பாடினார். மௌலானா முஹம்மத் மீரான் காஷிபி அவர்கள் பேருரையும், அதைத்தொடர்ந்து  சிற்றுரையை கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி துணை இமாம் மௌலவி அப்துல் ஹமீத் பைஜி மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி அரபி ஆசிரியர் ஹாஃபிழ் அஹமத் முகைதீன் ஆகியோரும் நிகழ்த்தினர். இறுதியாக பீச் அப்டேட் குழுமத்தின் அட்மின் S.M. ஹாஜா முகைதீன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் மூன்று இடத்தை பிடித்த பிள்ளைகளுக்கும் கலந்துக்கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் கடற்கரைத்தெரு நிர்வாகிகளும் மற்றும் தீனுல் இஸ்ஸாமிய இளைஞர் நற்பணி மன்ற சங்க நிர்வாகிகளும் பரிசுகளை வழங்கினர். 
மேலும் கடற்கரைத்தெரு முஹல்லாவின் இளம் ஹாபிழ்கள் A.G.முஹம்மத் ஜுபைர், ஷஹில் அஹமத் மற்றும் கடற்கரைத்தெரு மக்தப் முன்னாள் மாணவர் ஹாஃபிழ் A.ஹம்மத் ஜாபிர் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


இவ்விழாவில் கடற்கரைத்தெரு நிர்வாக பெருமக்களும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளும், முஹல்லா சகோதரர்களும் அனைவரும் கலந்துக்கொண்டனர். கொரோனா ஊரடங்கால் இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியாதவர்களின் வசதிக்காக அதிரை பிறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments