அதிரையில் நள்ளிரவில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி பெண்... ஓடி வந்த உதவிய மனிதநேயர்கள்

Editorial
0
நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு SDPI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் புஹாரி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய அவர் அதிரையை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலி எடுத்து இராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றதாகவும் அங்கு சென்ற போது நிலைமை மோசமாக இருப்பதால் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து ஏற்படலாம் எனக்கூறி நிலைய மருத்துவர் தனது காரிலேயே ஏற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கு மயக்க மருத்துவர் பணியில் இல்லாததால் தஞ்சாவூர் கொண்டு செல்லுங்கள் எனக்கூறிவிட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டும் வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகும் எனத் தெரிவிக்கிறார்க்கிறார்கள் எனக்கூறினார்.

உடனடியாக பட்டுக்கோட்டை அரசுத் தலைமை மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினேன். அவர் தஞ்சாவூர் தான் கொண்டு செல்ல வேண்டும் வேறு வழியில்லை எனக்கூறி விட்டார். பின்னர் பட்டுக்கோட்டை சரக DSP புகழேந்தி கணேஷ் அவர்களிடமும் பேசினேன். நிலைமையை புரிந்து கொண்ட அவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலாவது சேர்த்து தாயையும் சேயையும் காப்பாற்றுங்கள் மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் எனக்கூறினார்.

சரியாக நள்ளிரவு 2.45 மணியளவில் இறைவன் மீது தவக்கல் வைத்து பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். நிலைமை கவலைக்கிடம் தான் என்ற போதிலும் இறைவனின் உதவியாலும் மருத்துவர்களின் தீவிர முயற்சியாலும் தகுந்த நேரத்தில் சரியான முடிவெடுத்த SDPI நிர்வாகிகள் மற்றும் சரக DSP ஆகியோரின் கூட்டு முயற்சியாலும் தாயும் சேயும் காப்பற்றப்பட்டார்கள். 

இரு உயிர்களை காப்பாற்ற, அவசர காலத்தில் தனது காரிலேயே பட்டுக்கோட்டை அழைத்து வந்த மருத்தவர் பாலாஜி, நல்லிரவு வரை பட்டுக்கோட்டையில் உடனிருந்து உதவிய SDPI மாவட்ட தலைவர் புஹாரி, PFI ஏரியா ப்ரஸிடென்ட் ஜாவித், பட்டுக்கோட்டை சரக DSP புகழேந்தி கணேஷ் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. 

பெண் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்கிற சுபச் செய்தியை விட நமக்கு வேறென்ன வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

Z. முஹம்மது தம்பி 
அதிரை

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...