அதிரை செக்கடிப்பள்ளி, தக்வா பள்ளியில் தற்காலிகமாக ஜும்மா தொழுகை நடத்த முடிவு

Editorial
0
கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 5 மாத காலமாக பள்ளிகளில் தொழுகை நடத்தப்படாமல் இருந்தன. சென்ற மாதம் மற்ற தொழுகைகள் நடத்தப்பட்டாலும் ஜும்மா தொழுகைக்கு அனுமதி வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த செப்டம்பர் மாதம் ஊரடங்கு தளர்வை அடுத்து கடந்த வாரம் முதல் அதிரையில் உள்ள ஜும்மா பள்ளிகள் மீண்டும் ஜும்மா தொழுகை தொடங்கப்பட்டது.

ஆனால், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டதாலும், பலர் ஊரில் இருப்பதாலும் பள்ளிகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதாக பேசப்பட்டன. இதற்கு தீர்வுகாணும் வகையில், செக்கடிபள்ளி மற்றும் தக்வா பள்ளியில் தர்காலிகமாக ஜும்மா தொழுகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை மரைக்கா பள்ளியில் நடந்த ஜமாத்துல் உலமா சபை, ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...