அதிரையில் கால் நூற்றாண்டை கடந்து பயணிக்கும் ABCC கிரிக்கெட் அணி... சிறப்பாக நடைபெற்ற வெள்ளிவிழா

Editorial
0
அதிரை கடற்கரைத்தெரு ABCC அணி தொடங்கப்பட்டு 25 வது ஆண்டுகள் கடந்ததை அடுத்து வெள்ளி விழா கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு நிர்வாகிகள், ABCC அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணியின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

கடற்கரைத்தெரு நிர்வாக தலைவர் VMA.அஹமத் ஹாஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ABCC அணியினர் முன்னிலை வகித்தனர். 
அன்சர்தீன் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் அப்துர் ரஹ்மான் தொகுப்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார்.
இதில், சமீபத்தில் நடைப்பெற்ற அதிரை சிட்னி அணியின் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற ABCC அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அணியினருக்கும், முன்னாள் அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதை கடற்கரைத்தெரு ஜமாஆத் நிர்வாகிகள் மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில் அதிரையின் அனைத்து கிரிக்கெட் அணிகளின் தலைவர்களும் ABCC அணியினருக்கு வழங்கினர்.
25 ஆண்டுகளை கடந்துள்ள அதிரை பீச் கிரிக்கெட் கிளப் அணிக்கு அதிரையின் மற்ற அணியினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை முதல் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டியை ABCC அணி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...