அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை தாலுக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும். தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் 738 பேரும் பட்டுக்கோட்டை வட்டத்தில் 127 பேரும் பட்டுக்கோட்டை நகரில் மட்டும் 39 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.