அதிரை இளைஞர் மீது கொடூர தாக்குதல் - கொதித்து எழுந்த மக்கள்

Editorial
0
நேற்று அதிரையின் வாட்ஸ் அப் குழுமங்களில் ஒரு இளைஞர் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் இருக்கும் படங்களுடன் 2 ஆடியோக்கள் பரப்பப்பட்டன. அதில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் செய்த ஒரு தவறுக்காக அவரை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியதாகவும், இதனால் அந்த இளைஞர் படுகாயமடைந்ததாக அந்த ஆடியோவில் பேசும் நபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

படுகாயங்களுடன் காணப்படும் அந்த இளைஞரின் படஙகளை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இக்குற்றச்சாட்டை  பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மறுத்து உள்ளது. இது தொடர்பாக தஞ்சை மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மர்ஜுக் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் அதிரை மார்க்கெட் தெருவில் உள்ள ஹர்ரா எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் அஹமது ரிழா அவர்களின் கடையில் சில வருடங்களாக வேலை செய்து வருகின்றார்.

இந்நிலையில் ரூபாய் 66,100/-  
இரண்டு தவனையாக ரிழா கடையில் 
காணாமல் போயுள்ளது. அந்த நேரங்களில் அந்த இளைஞர் கடையில் இருந்துள்ளார்.
 இதே நேரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் வீட்டிலும் சுமார் ஒரு லஞ்சம்(1,00,000) ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போயுள்ளது.

இது சம்மந்தமாக அவரது வீட்டினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து  விசாரணை நடத்தியதில் கள்ள சாவி போட்டு நகைகள் திருடப்பட்டுள்ளது   தெரியவந்தது.

திருடியவர் வெளியில் இல்லை வீட்டினுள்ளேயே உள்ளனர் என்று காவல்துறை சொன்ன மாத்திரத்தில் புகார் மனு அவன் வீட்டினரால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது தெரிந்தவுடன் ரிழா விற்கு இளைஞர் மீது சந்தேகம் வலுத்து பணம் காணாமல் போனது சம்மந்தமாக கேட்டதில் பப்பரிசி கடையில் போலி சாவி (ரிலா கடை சாவி) போட்டு ரூபாய் 66100/- திருடியதும் அந்த பணத்தில் தமீம் என்பவரிடம்  17000/- ரூபாய்க்கு பைக் வாங்கியதும் அதனை பைக் மெக்கானிக் அசார் கடையில் பழுது நீக்க கொடுத்தத்தையும் ஒப்புக்கொண்டுள்ளான்.

உடனே தமிம் வசம் பைக்கை திரும்ப கொடுத்துவிட்டு  17000/- ரூபாய் பணத்தை திரும்ப வாங்கி ரிலாவிடம் கொடுத்துள்ளான்.

இந்நிலையில் 02/07/2020 அன்று காயங்களோடு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிந்து அன்று காலை சுமார் 
9 மணியளவில் நேரில் சென்று அஹமது ரிலா நலம் விசாரித்துள்ளார்.

ஆனால் அஹமது ரிழாவே  அடித்து துன்புரித்தியதாகவும் முதல் குற்றவாளியாகவும் கொண்டு வந்திருப்பதிலிருந்தே சில சமூக விரோத சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே பொய்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

இது போன்ற செயல்களில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு உடன்பாடு கிடையாது
ஆகவே பாப்புலர் ஃப்ரண்ட் மக்கள் 
நலப் பணிகளில் முன்னோக்கி செல்லும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்." என தெரிவித்து உள்ளார்.

குறிப்பு: சம்பந்தப்பட்ட இளைஞரின் நலன் கருதி அவரது பெயரும் முகப்படமும் தவிர்க்கப்பட்டு உள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...