அதிரையில் ஆட்டோக்களை அழைக்க தனி மொபைல் ஆப்ளிகேஷன் வந்தாச்சு...

Editorial
2

அதிரையில் இன்றளவும் ஆட்டோக்களின் தேவை குறைந்தபாடில்லை. ஊரின் எல்லைகள் விரிவடைந்து செல்வதால் ஆட்டோக்களின் தேவை அதிகரித்து உள்ளது.

சில நேரங்களில் வாடிக்கையாக வைத்துள்ள ஆட்டோக்கள் அவசரத்துக்கு அழைத்து வராவிட்டால் வேறு ஆட்டோக்களை நாட வேண்டி உள்ளது. அவர்களுக்கு மற்ற ஆட்டோ ஓட்டுநர்களின் தொலைபேசி எண்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.

அவர்களுக்கு உதவ ஆட்டோ ஆப் என்ற புதிய ஆண்டிராய்டு அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதில், ஆட்டோ ஸ்டான்டுகளின் சங்க பொறுப்பாளர்கள், ஆட்டோக்கள் மற்றும் தனியாக இயக்கப்படும் ஆட்டோ ஓட்டுநர்களின் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள எண்ணை தொடுவதன் மூலம் கால் செய்யலாம்.  அத்துடன் அவசியமாக சில தொலைபேசி எண்களையும் இணைத்து உள்ளனர்.

கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து இந்த ஆப்ளிகேஷனை தரவிரக்கம் செய்யலாம். இந்த அப்ளிகேஷன் நமதூர் மக்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். அதே வேளையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது ஏதேனும்புகார் இருந்தால், அதையும் தெரிவிக்கும் வசதியையும் ரேட்டிங் வழங்கும் வசதியையும் வழங்க வேண்டும். பாதுகாப்பின்றி ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஒழுக்கமின்றி நடந்துகொள்பவர்களின் பெயர்களை நீக்கினால் இந்த அப்ளிகேஷன் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

https://drive.google.com/file/d/1-JWezhavBZKvf9jwca8hqr62p5r1yBXv/view?usp=drivesdk

Tags

Post a Comment

2Comments
  1. லின்க் ஓபன் ஆகவில்லை...

    ReplyDelete
  2. ஆட்டோவை அழைக்க பதிவிறக்கம் செய்யும் லிங்க் வேலை செய்யவில்லை

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...