அதிராம்பட்டினம் லிஸ்ட்லயே இல்லையாம்... ஆங்கிலத்தில் நமதூரை எப்படி எழுதுவது?

Editorial
0
அதிராம்பட்டினத்தின் பெயரில் எப்போதுமே குழப்பம் நீடித்து வருகிறது. எந்த வரலாற்று பின்னணியும் இன்றி ஒரு மன்னரின் பெயருடன் இணைத்து ஊர் பெயரை தெரிவித்து குழப்பம் விளைவித்து வருகின்றனர். இதுஒருபுறம் என்றால் அதிரையின் பெயரை ஆங்கிலத்தின் எழுதுவதிலும் குழப்பம் உள்ளது. பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் "ADIRAMPATTINAM" என்ற எழுதுகிறோம். கடை முகவரிகள், கடித முகவரிகளில் இப்படியே எழுதப்படுகிறது. ஆனால், சில அரசு நிறுவனங்களின் இணையதளங்கள், வங்கி மற்றும் தனியார் சேவை இணையதளங்களில் "ATHIRAMPATTINAM" என்று குறிப்பிடப்பட்டு உள்ளதை பார்த்திருப்போம்.

நமக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில், பெயர் பலகைகளில் "ADIRAMPATTINAM" என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதே நேரம் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி என்ற பெயரில் "ADIRAMPATTINAM" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே அட்டையின் கீழ் அதிராம்பட்டினம் பாகம் என்பதற்கான ஆங்கில பெயரில் "ATHIRAMPATTINAM" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் COIMBATORE என்று உள்ளதை இனி KOYAMPUTHTHOOR என மாற்றப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 
இதிலாவது அதிராம்பட்டினத்தின் பெயர் குழப்பம் முடிவுக்கு வரும் எதிர்பார்த்தபோது  தஞ்சை மாவட்ட வரிசையில் நமதூரின் பெயரே இல்லை. அதன் மூலம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பெயர்களை பொருத்தவரை (த், தி, த, தா, தெ, தே) என்ற எழுத்துக்களை உள்ளடிக்கிய ஊரின் ஆங்கில பெயர்களில் D, T என்பதற்கு பதில் Th என்று மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தால் அதிராம்பட்டினத்தின் உச்சரிப்பின் அடிப்படையில் "ATHIRAMPATTINAM" என்ற மாற்றி இருக்க வேண்டும். ஆனால் மாற்றவில்லை.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...