அதிராம்பட்டினத்தை சேர்ந்த அனைவரும் டிஸ்சார்ஜ்... கொரோனா இல்லாத பகுதியானது

Editorial
0
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவையாறு, திருவோணம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், அம்மாபேட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 69 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறுதியாக ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த கடைசி ஒரு நபரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். 44 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அந்த நபர் குணமடைந்ததன் மூலம் அதிராம்பட்டினம் கொரோனா இல்லாத பகுதியாக மாறியுள்ளது. அதிரை திரும்பிய அவருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது தம்பி மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், காவல்துறை அதிகாரிகள் உறவினர்கள் வரவேற்றனர்.

குணமடைந்து வீடு திரும்பு நபர்கள் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இது நீடிக்க அதிரை மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளி, சுகாதாரத்தை கடைபிடிக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...