அதிரையில் இப்படியும் ஒரு வாட்ஸ் அப் குழு... 85 குடும்பங்களுக்கு உதவி

Editorial
0
அதிரையில் பல்வேறு பெயர்களில் வாட்ஸ் அப் குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் வீணான பேச்சுக்ககும், சண்டை சச்சரவுகளுமே அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிரை சகோதரர்கள் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதற்கென தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு உதவிகளை இந்த குழுமத்தின் மூலம் செய்து வருகின்றனர்.

தீயில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு உதவுவது, ரமலானில் வருமானம் குறைவான பள்ளி வாசலுக்கு உதவுவது, அவசரகாலத்தில் இரத்தம் ஏற்பாடு செய்வது, உடல் நிலை குன்றிய நபர்களும் உதவுவது, இப்படி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த வருட ரமலான் மாதத்தில் ஊரடங்கால் சிரமப்படக்கூடிய 85 ஏழை குடும்பத்துக்கு தலா ₹500 மதிப்புள்ள மளிகை டோக்கன் வழங்கியுள்ளனத். இந்த டோக்கன் மூலம் மளிகை கடைகளில் ₹500 மதிப்பில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழும நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...