அதிரையில் ஆஃபருக்கு ஆசைப்பட்டவருக்கு அக்கவுண்ட் காலி... உஷார்!

Editorial
1
இணையதளத்தை மையப்படுத்தி நடக்கும் மோசடி தொடர்ந்து பல வகைகளில் நடந்தேறி வருகிறது. காலப்போக்கில் ஸ்மார்ட்போன்களும், சமூக வலைதளங்களும் அத்தியாவசியமாகி விட்டதால் விபரம் தெரியாதவர்களும் அதை பயன்படுத்தி வருகின்றனர். பொருட்கள் வாங்குவது முதல் வங்கி பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் போனிலேயே முடிந்துவிடுகிறது. குறிப்பாக தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க நிறுவனஙகள் ஆன்லைன் மூலம் ஆஃபர்களை அள்ளிவீசுகிறார்கள். அதில் 50% போலியானதாகவே உள்ளது.
அதிரையை சேர்ந்த நபர் ஒருவர், அண்மையில் பேஸ்புக்கில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். ப்ளிப்கார்ட் பேஸ்புக் பக்கம் போல் இருந்த ஒரு கணக்கில் ஐபோன் 11 ப்ரோ மொபைல் ₹2,500 க்கு ஆஃபரில் கிடைக்கும் என விளம்பரம் வந்துள்ளது. அதை கிளிக் செய்தவுடன், அவரது தனி விபரம், வங்கி கணக்கு எண், எடி.எம்.சி. நம்பர் கேட்கப்பட்டுள்ளது. இதில் அந்த விபரங்களை பதிவிட்ட சில மணி நேரத்தில் அவரது கணக்கில் இருந்த ₹4000 பணம் மாயமானதாக தெரிவிக்கிறார்.அதன் பிறகு பார்த்தால் FLIPKART என்ற பெயருக்கு பதில் சில எழுத்துக்களை மாற்றி அதே போன்ற பக்கம் மற்றும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது அவர் தெரிந்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் உள்ள வங்கி கிளையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டே இதனை எச்சரித்து பிளிப்கார்ட் செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி "இதுபோன்ற மோசடிகள் தெரியவந்தால் ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் கேர் சப்போர்ட் கட்டணமில்லா தொலைபேசி 1800 208 9898 என்ற எண்ணுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்." என அறிவுறுத்தி உள்ளது. முழு செய்தி

இதுகுறித்து ஓமனில் பணிபுரியும் இணைய பாதுகாப்பு பாதுகாப்பு முகமது ஆதில் நம்மிடம் கூறுகையில், 

"துபையை சேர்ந்த நண்பன் ஒருவனுக்கு படத்தில் உள்ள மெசேஜ் வாட்சப் வழியாக வந்திருக்கிறது. Covid-19ஐ முன்னிட்டு லூலூ சூப்பர் மார்க்கெட்டில் 500 அமீரக திர்ஹம் மதிப்பிலான கூப்பன் கொடுக்கிறார்கள் அதற்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும் என்று. அவரும் அதனை க்ளிக் செய்திருக்கிறார். பின்னர் பேங்க் அக்கவுண்ட் டீட்டெய்ல்ஸ், ஏ.டி.எம். கார்டு டீட்டெய்ல்ஸ் மற்றும் CVV கோட் என அனைத்தையும் அந்த வெப்சைட்டில் கேட்டிருக்கிறார்கள்.

அனைத்து தகவல்களையும் கொடுத்தபின்னர் ஒன்றும் நடக்கவில்லை. இது நீண்ட நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஹேக்கிங் முறை. இதற்கு ஃபிஷ்ஷிங் என்று சொல்வார்கள். பிரபலமான நிறுவனங்களின் பெயரில் ஆஃபர்கள் வழங்குவதாக கூறி பொதுமக்களின் தகவல்களை திருடுவது. ஏ.டி.எம். டீட்டெய்ல்களை வைத்து ஆர்டர் செய்வது என பல நிகழ்வுகள் நடக்கின்றன. 
பின்வருவனவற்றை கவனித்தால் இதிலிருந்து எளிதாக பாதுகாப்பு பெற முடியும்:

1. இந்த படத்தில் இருக்கும் லிங்கை பாருங்கள் (superma.co) இது லூலூ ஹைப்பர் மார்க்கெட்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்ல.

2. http என இந்த இணைய அட்ரஸ் துவங்குகிறது. எந்தவொரு நிறுவனங்களின் வெப்சைட்டும் இப்போது httpல் இருக்காது. மாறாக https என இருக்கும்.

3. விளம்பரச்செய்தி நேர்த்தியானதாக இருக்காது. லோக்கல் நடைமொழியில் இருக்கும்.

நீங்கள் இந்த லிங்கை தெரியாமல் க்ளிக் செய்துவிட்டால் இதிலிருந்து பாதுகாப்பது எப்படி?

1. தவறுதலாக லிங்கை க்ளிக் செய்தாலும் அதன் பின்னர் கேட்கும் தகவல்களை தராதீர்கள்.
2. உடனடியாக அந்த ப்ரவுசரை க்ளியர் செய்யுங்கள்.
3. மொபைல் போனை உடனடியாக ரீ-ஸ்டார்ட் செய்யவும். இந்த லிங்கில் RAT, Backdoor மால்வேர் இருந்தால் ரீ-ஸ்டார்ட் செய்வதன் மூலம் ஹேக்கருக்கும் நமக்குமான செஸ்ஸனை துண்டிக்க முடியும்.
4. வைபை பயன்படுத்துபவர்கள் ரூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்.
5. தகவல்களை கொடுத்துவிட்டால் கொடுக்கப்பட்ட ஏ.டி.எம் கார்டை உபயோகப்படுத்தக்கூடாது. வங்கிகளில் சென்று முறையிட்டு கார்டை மாற்ற வேண்டும்.

கொரோனாவை முன்னிட்டு பல்வேறு இணைய மோசடிகள் நடக்கிறது. அதிலிருந்து எச்சரிக்கையாக பாதுகாப்போடு இணையத்தை பயன்படுத்துவோம்." என்றார்.

Post a Comment

1Comments
  1. https://m.facebook.com/story.php?story_fbid=2908722625880557&id=100002285435929

    உங்க போஸ்ட்ட முன்னமே காப்பி அடிச்சி யாரோ போட்டு இருக்காங்க

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...