அதிரையில் இன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை அறிவித்த TNTJ - நேர விபரம்

Editorial
0
தமிழகத்தில் ஷவ்வால் மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் பற்றிய அறிவிப்பு. 
பிறை தேட வேண்டிய நாளான 09.04.2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் கோவை - சாரமேடு கரும்பு கடை  மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09.04.2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10.04.2024  புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் அதிரை TNTJ கிளை 2 சார்பாக சிட்னி மைதானம் அருகே காலை 7 மணியளவில் திடல் தொழுகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று TNTJ கிளை 1 இன் சார்பாக பிலால் நகர பெட்ரோல் பங்கு எதிரே உள்ள மைதானத்தில் இன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...