அதிரை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்கப்படுமா?

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
மயிலாடுதுறை, திருவாரூர், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, காரைக்குடி ரயில் பாதையில் அமைந்துள்ள முக்கியமான ரயில் நிலையம் அதிராம்பட்டினம். அதிராம்பட்டினத்தை சுற்றி மல்லிப்பட்டினம், ராசா மடம், தம்பிக்கோட்டை போன்ற முக்கியமான ஊர்கள் உள்ளன. அதிராம்பட்டினத்தில் காதர் முகைதீன் கல்லூரி மற்றும் அரசு தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன.

ராஜாமடத்தில் அண்ணா  பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. அதிராம்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள் சென்னை மண்ணடி பகுதியில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதிராம்பட்டினம் பகுதி பொது மக்கள், வர்த்தகர்கள், மீனவர்கள் சென்னைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வெளிநாடு செல்வது, புனித யாத்திரை போன்ற பல காரணங்களுக்காக அதிகமாக பயணம் செய்யக்கூடியவர்கள்.

மீட்டர் கேஜ் காலத்தில் அதிகமான ரயில் பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தார்கள். கடல் மீன்கள் ரயிலில் ஏற்றுமதி செய்யப்பட்டது. மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி ரயில் தடத்தில் தற்போது விரைவு ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த தடம் மின்சாரம் மயமாக்கப்பட்டால் மேலும் அதிக ரயில்கள் இயங்க வாய்ப்புள்ளன.

தற்போது இயங்கி வரும் தாம்பரம் செங்கோட்டை தாம்பரம் அதி விரைவு ரயில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. எனவே அதிராம்பட்டினம் பயணிகள் நலனுக்காக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் வர்த்தகர்கள், கல்வியாளர்கள், சென்னை வாழ் அதிராம்பட்டினம் மக்கள் தென்னக ரயில்வே பொது மேலாளர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் திருச்சி கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அண்மையில் பேராவூரணி, அறந்தாங்கி, ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...