தஞ்சாவூர் தொகுதியில் பழனிமாணிக்கத்தை கழற்றிவிட்ட திமுக.. வேட்பாளர் யார் தெரியுமா?

Editorial
0

தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு சீட் வழங்கப்படவில்லை.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். கடந்த முறை இந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த பரசுராமன் எம்பி ஆக இருந்தார். அதற்கு முன் பழனிமாணிக்கம் எம்.பி ஆக இருந்தார். தஞ்சை மாவட்ட திமுகவின் தவிர்க்க முடியாத புள்ளியாக பழனிமாணிக்கம் வலம் வந்தாலும், மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசல் கட்சித் தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது. பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் சில பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவையே பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் நடந்து கொண்ட விதம் கட்சித் தலைமை வரை சென்றது.

இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்படுவதற்கு முன்பே தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நிறுத்தப்பட மாட்டார் என்ற செய்திகள் அரசல் புரசலாக வெளிவந்தன. குறிப்பாக திமுகவினரே இந்த தகவலை கூறி வந்தனர். இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கியவர்களுக்கு தற்பொழுது நேர்காணல் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட திமுகவை சேர்ந்த பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று வேட்பாளர்கள் பெயரை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தஞ்சை தொகுதி வேட்பாளராக முரசொலி நிறுத்தப்பட்டு உள்ளார்.




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...