அதிரை பள்ளிவாசல்களில் சிறுவர்களை விரட்டாதீர்கள்.. நாளைய தலைமுறை நலமாகட்டும்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
ரமலான் மாதத்தில் பள்ளிகளில் சிறு வயது பிள்ளைகள் ஆர்வமாக தொழுகைக்கு தம் நண்பர்களோடு வருகிறார்கள். அவர்கள் கொஞ்சம் தொழுகை கொஞ்சம் குறும்பு என்று தம் பிஞ்சு வயதுக்கேற்ற இயல்போடு இருக்கிறார்கள். அவர்களை வயதானவர்கள் பள்ளியில் சத்தம் போடக்கூடாது, ஒழுங்கா தொழுரதுனா தொழு இல்லைனா வெளிய போ! என்று விரட்டிவிடுகிறார்கள்.

சில நேரங்களில ஆர்வமாக ஓடி வந்து இமாமுக்கு பின்னால் முன் வரிசையில் நின்றால் அவர்களை பின் வரிசைக்கு தள்ளிவிடுகிறார்கள். இந்த சிறுவர்கள் பள்ளியில் வந்து விளையாடுவதும், தொழுவதும்தான் நாளைய தலைமுறை சரியான பாதையில் உள்ளது என்பதற்கான சான்று.

அவர்களை விரட்டவேண்டாம், அதனால் பள்ளிக்கு வரும் ஆர்வம் குறைந்து வெளியே சென்று விட்டால், நாளைய தலைமுறை பெரும் கைசேதத்தை சந்திக்க நாமே வழிவகுத்தை போல் ஆகிவிடும். இன்று சிறுவர்கள் இல்லா பள்ளி நாளை அது வெரும் பாழடைந்த கட்டிடம் மட்டுமே

பதிவு: ஃபைசல் அஹமத் 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...