Ads: Crescent builders - Coming Soon

அந்த கடிதத்தில், "எங்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் 1920-ம் ஆண்டு துவங்கப்பட்டு சமூக, மக்கள் நலன் சார்ந்த சேவைகளில் தொடர்ச்சியாக இது நாள்வரை தொண்டாற்றி வருவதை அறிவீர்கள். எங்கள் முஹல்லா 16 பள்ளிவாசல்களின் ஜமாஅத் பகுதிகளை உள்ளடக்கியது.
அதிராம்பட்டினம் துறைமுகம் கடந்த நூற்றாண்டு வரை அயல்நாட்டு வணிகத்தில் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. அக்காலத்தில் 1900- 1910 ஆண்டுகளில் அக்கால பெருமதியில் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய்க்கான ஏற்றுமதி மற்றும் 3 லட்சம் ரூபாய்க்கான இறக்குமதி கடல் வாணிபம் நடந்திருக்கின்றன. வெள்ளையர்கள் காலத்து துறைமுக சுங்க கட்டிடங்கள் சிதைந்த எச்சங்களாக மிச்சமுள்ளன.
25 வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் பயன்படுத்தும் வகையில் இருந்த எழில் கொஞ்சும் கடற்கரை இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த கடற்கரையை மீட்டு மக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அமைத்துத் தர வருகை தந்திருக்கும் தங்களை உளவன்போடு வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.