அதிரையில் வெள்ளி விடுமுறை கட்.. காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அருகே வெடித்த ஆர்ப்பாட்டம்

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மற்றும் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனமான இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசு மற்றும் நீதிமன்ற அனுமதியுடன் விடுமுறை விடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தினமாக இருப்பதால் அந்த நாளில் அதிரையில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை வேறு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக காதிர் முகைதீன் பள்ளிகளில்  வெள்ளிக்கிழமை மாணவ மாணவிகளுக்கு பள்ளி நடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காதிர் முகைதீன் பள்ளிகளில் அரசு பொது செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வு எழுதாத மற்ற வகுப்பு மாணவ மாணவிகளும் பள்ளிக்கு வருமாறு அழைக்கப்பட்டு உள்ளனர். இதனை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை பள்ளி அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

அவர்களிடம் பொதுமக்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைத்தனர் அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை என்றும் அதை தொடர வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து வெள்ளிக்கிழமை விடுமுறை விடுவது தொடர்பாக சில நாட்களில் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...