அதிரை கடற்கரை தெருவில் உண்டியல் திட்டம் வெற்றி.. ஒரே மாதத்தில் ரூ.11,379 சேமித்து ஏழைகளுக்கு உதவி

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
மும்பையில் பள்ளிவாசல்கள் மூலமாக வீட்டுக்கு வீடு உண்டியல் வழங்கி அதை கொண்டு தினமும் பணம் சேர்த்து பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் அவசிய தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முஃப்திகள் கூட்டத்துக்காக மும்பை சென்ற அதிரை உலமாக்கள் இந்த திட்டத்தை நமதூரிலும் கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறார்கள்.

அதன்படி அதிரை இஜாபா, கடற்கரைத்தெரு ஜும்மா உள்ளிட்ட பல பள்ளிவாசல்கள் தாருல் ஹைர் என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. உண்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடற்கரைத் தெரு முஹல்லாவில் மட்டும் சுமார் 34 வீடுகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் தொகைகள் பிரதி மாதம் வசூலிக்கப்பட்டு பகுதியில் உள்ள தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் இரண்டாவது மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகை சுமார் 11,379 ரூபாயை  மஹல்லாவில் இருக்கக்கூடிய ஏழைப்பட்ட மக்கள்,   சிரமப்படக்கூடிய குடும்பம் என 15 வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு  அவர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள கிட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.  உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள்  "செலவுக்கு என்ன செய்வது என தவித்துக் கொண்டிருந்தோம் , இந்த உதவி மறக்க முடியாதது" என தெரிவித்து யாவரும் மனமார துஆ செய்தார்கள்.

உண்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.. "ஒரு பேரித்த பழத்தின் சிறு பகுதியை தர்மம் செய்தாவது நரகிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.." (நூல்: புகாரி)

1. தர்மத்தின் காரணமாக துன்பங்களும் வேதனைகளும் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

2. மறக்காமல் தினமும் குறைந்தபட்சம் ஒரே ஒரு ரூபாயாவது போட வேண்டும், அதிகபட்சத்திற்கு அளவில்லை.

3. கண்ணிலே படுவது போல உண்டியலை வீட்டின் ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்து வர வேண்டும்.

4.ஏதேனும் மருத்துவ தேவைக்காக அல்லது இதர தேவைகளுக்காக செல்லும் போதும் தர்மம் செய்துவிட்டு செல்வது நல்லது, அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

5. மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்பட்டு நம் பகுதியின் ஏழைகள், அனாதைகள், விதவைகள், மற்றும் தீனுடைய இதர நற்காரியங்களுக்காக இந்த தொகை இன்ஷா அல்லாஹ் செலவழிக்கப்படும்.

குறிப்பு: ஜகாத் உடைய தொகை எதையும் இந்த உண்டியலில் போடாமல் உபரியான தர்மத்திற்கு மட்டு இதை பயன்படுத்தவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...