இந்த நிலையில் சீல் அகற்றப்பட்டதை கண்டித்து நகராட்சிக்கு ஆதரவாக இந்து முன்னணி போராட்டம் நடத்த திட்டமிட்டது. இது தொடர்பாக அவர்கள் தயாரித்த போஸ்டரில் "நகராட்சிக்கு சொந்தமான வானொலி பூங்காவை தனியார் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து மீட்டு தராத மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நாள்: 23-01-2024 மாலை 5 மணி, இடம்: பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்து முன்னணி நடத்த விருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி இந்து முன்னணியை சேர்ந்த சுமார் 3 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 30 காவல்துறையினர் கைது செய்தனர். தொடக்கத்தில் பத்து பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டத்தில் இருந்த பலர் போலீஸ் என்றும் மூன்று பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததும் தெரியவந்தது.