அதிரை மத நல்லிணக்க மண் என நிரூபித்த இந்துக்கள்.. இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்து பாடம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளியின் நிலம் மீட்பு போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த 21ம் தேதி இரவு அதிகாரிகள் பள்ளியின் சீலையும் பூட்டையும் அகற்றினர். அருகில் வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் பேனர்களும் கிழிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் அதிராம்பட்டினம் பெண்கள், ஆண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் பள்ளி நிர்வாகம், வழக்கறிஞர்கள், போராட்டக் குழுவினர்  மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் காரணமாக இந்த வெற்றி கிடைத்தது.

இந்த நிலையில் சீல் அகற்றப்பட்டதை கண்டித்து நகராட்சிக்கு ஆதரவாக இந்து முன்னணி போராட்டம் நடத்த திட்டமிட்டது. இது தொடர்பாக அவர்கள் தயாரித்த போஸ்டரில் "நகராட்சிக்கு சொந்தமான வானொலி பூங்காவை தனியார் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து மீட்டு தராத மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நாள்: 23-01-2024 மாலை 5 மணி, இடம்: பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்த இந்து முன்னணி மக்களுக்கு அழைப்பு விடுக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று மாலை பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றது. ஆனால் பொதுமக்கள் யாரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து வரவில்லை. அங்கு வந்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
இமாம் ஷாஃபி பழைய பள்ளி நிலம் மீட்பு போராட்டம் என்பது பெண்களுக்கு பல ஆண்டுகளாக கல்வியை வழங்கி வந்த பள்ளி மீண்டும் செயல்பட வேண்டும் என்றால் நல்ல நோக்கத்தில் தான். ஆனால் இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைய நினைத்தவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் அதிரை என்றும் மத நல்லிணக்க மண் என்பதை அதிரை இந்து சகோதரர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...