அதிரையில் இமாம் ஷாபி பெண்கள் பள்ளி இடத்தை மீட்க பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதில் பங்கேற்க வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஃபிரெட்டர்நிட்டி இயக்க தலைவர்கள் அதிரை வருகிறார்கள்.
இதுகுறித்து வெல்ஃபேர் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "பெரும்பான்மை சமூக நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையும்., முஸ்லிம், கிறிஸ்த்துவ நிறுவனங்கள் மீது வெறுப்பும், வன்முறையுமா...? இது அண்ணா, பெரியார் வழி வந்த தி.மு.கவா ? அல்லது கோட்சே, சாவர்க்கர் வழியை பின்பற்ற போகும் சனாதன சங்கி கூடமா...?
இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன் பள்ளி, மெட்ராஸ் கிறிஸ்த்துவ கல்லூரியை பாதுகாக்க அணிதிரள்வோம். அதிரை மக்களின் தொடர் போராட்டத்தில் பங்கேற்க வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு தலைவர்* கே.எஸ் அப்துல் ரஹ்மான்
துணை தலைவர் ம.முஹம்மது கவுஸ்
ஃபிரெட்டர்நிட்டி இயக்கம்
அஸ்வத் ஷரீஅத்தி அதிரை விரைகின்றனர்.." என்று குறிப்பிட்டு உள்ளது.