அதிரையில் மாறுவேடத்தில் போராட்டத்தை கலைக்க சதி.. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு போன்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இமாம் ஷாபி பழைய பள்ளி வளாகத்தை எந்தவிதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் நகராட்சி நிர்வாகம் புல்டோசருடன் வந்து ஜப்தி செய்தது அதிரை மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாபியின் மீது நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை முதல் இமாம் ஷாபி பழைய பள்ளி வெளியே அதிராம்பட்டின மக்கள் ஷாகின் பாக் பாணியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளார்கள். 

இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநில நிர்வாகி அபூபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுக்கும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருவதுடன் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நகராட்சிக்கு ஆதரவாக செயல்படும் கூட்டம் ஒன்று மாறுவேடத்தில் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் என்ற பெயரில் அனைத்து பள்ளிவாசல் தலைவர்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என அரசு தரப்பிலும் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சில பள்ளிவாசல் தலைவர்களிடம் பேசியும் உள்ளனர். அதற்கு இந்த பள்ளிவாசல் தலைவர்கள் சிலர் மறுப்பு தெரிவித்து இமாம் ஷாபி பள்ளிக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...