Ads: Crescent builders - Coming Soon
இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையிலும் பள்ளிகள், கல்லூரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தினத்தை கொடியெற்றி கொண்டாடினர்.
அந்த வகையில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சங்க வளாகம் அருகே குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் முஹம்மது சாலிஹ் தலைமை தாங்கி தேசிய கோடியேற்றி சிறப்பித்தார். இதில் மௌலவி ஜாபிர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.