அதிரை மக்களின் கிடுக்குப்பிடி கேள்வி.. நழுவிச் சென்ற ஆர்.டி.ஓ! அறிவுசார் மையத்துக்கு அரசாணையே வரலையாம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஆர்.டி.ஓ. கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நழுவிச் சென்றார்.

மக்களின் கேள்விகளையும் ஆர்.டி.ஓவின் பதில்களையும் பார்ப்போம்.

ஆர்.டி.ஓ: இமாம் ஷாபி இடத்தில் அறிவுசார் மையம் அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மக்கள்: வேறு இடம் ஈ.சி.ஆரில் உள்ளது. அதை தருகிறோம். இங்கு வரக்கூடாது.

ஆர்.டி.ஓ: இது அரசு நிலம். இங்குதான் வரும்.

பத்திரிகையாளர்: அறிவுசார் மையம் அமைக்க அரசாணை எப்போது வந்தது.

ஆர்.டி.ஒ: பொங்கல் முடிந்து 4 நாட்களில் வரும்.

பத்திரிகையாளர்: அப்படியென்றால் இந்த போராட்டத்தை மங்க வைக்க இப்படி ஒரு அறிவிப்பு வருகிறதா?

ஆர்.டி.ஒ: பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு எல்லா விதத்திலும் பதில் அளித்துவிட்டேன்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...