அதிரை இமாம் ஷாபிக்காக ஒன்று கூடிய 14 ஊர் ஜமாத்துகள்.. முழு ஆதரவு என வெளியான அறிக்கை

Editorial
0
அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி நில மீட்பு போராட்டத்துக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 ஊர்களின் ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பான SBC ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து அதன் தலைவர் அசன் முகைதீன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினதில் பல ஆண்டுகளை கடந்து இயங்கி வந்த இமாம் ஷாஃபி என்ற கல்வி நிறுவனத்துக்கு தற்சமயம் சீல் வைக்கப்பட்டு உள்ளது.  அந்த கல்வி நிறுவனம் சிறுபான்மையினரின் கல்வி
நிறுவனமாக இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களின் குழந்தைகளும்
இங்கு கல்வி கற்க்கின்றனர். பல ஆண்டுகள் இயங்கி வருகின்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆகவே இந்த கல்வி நிறுவனம் தொடர்ந்து இயங்க தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டுமாய் ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பு SBC (14ஊர்கள்) சார்பாகவும், நிர்வாகத்தின் சார்பாகவும்  கேட்டுக்கொள்கிறோம். இமாம் ஷாஃபி கல்வி நிறுவனத்தை  மீட்டெடுக்க போராடும் உறவுகளுக்கு ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பு SBC(14ஊர்கள்) சார்பாக முழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...