அதிரை நகராட்சி ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சுகிறதா? TNTJவுக்கு வெள்ளை கொடி காட்டி சமாதான பேச்சு

Editorial
0
அதிரை TNTJ கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், "@திராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் தொடர் அலச்சியப்போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன உரை: ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர் ,TNTJ)
நாள்: 08.12.2023 வெள்ளி 
நேரம்: மாலை 4:30 மணி (இன்ஷாஅல்லாஹ்)
இடம்: பேருந்து நிலையம்

அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடு!
1)மக்களை கடித்து குதறும் தெருநாய்களை கட்டுப்படுத்து!
2)விபத்துக்களை ஏற்படுத்தும் விதத்தில் சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்து!
3)அதிக வரி செலுத்தும் CMPலைனுக்கு கழிவு நீர் வடிகால் அமைத்து தராமல் தொடர்ந்து புறக்கணிக்காதே!
அனைவரையும் ஆட்பரிக்க அழைக்கிறது." என்று குறிப்பிட்டு இருந்தது.

இது தொடர்பாக நகரம் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக TNTJ அறிவித்து உள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலில், "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளைகள் நடத்த இருந்த 08-12-2023) இருந்த கண்டன ஆர்பாட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுகிறது! 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளைகள் சார்பில் நாளை மாலை அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் நகராட்சி நிர்வாகம் மாவட்ட கிளை நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இக்கூட்டத்தில் CMP லைனுக்கு கழிவுநீர் வடிகால் அமைக்க போடப்பட்ட ஆணை மற்றும் மாடுகள் பிடிப்பு, நாய்கள் குறித்து தங்கள் இதுவரை எடுத்த நடவடிக்கைகளை எடுத்து கூறினார்,மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார்.
நகராட்சி நிர்வாகத்துடன் கிட்டதட்ட இரண்டு மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களின் வரையறையை விளக்கி சொன்னதுடன் மேல் அதிகாரிகளை நமது ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் மூலம் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதன் விளைவாக தற்காலிமாக கண்டன ஆர்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது." என்று குறிப்பிடத்தக்கது.

நகராட்சி TNTJவிடம் நடத்திய இந்த பேச்சுவார்த்தை என்பது மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களின் மீதான அச்சமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...