இந்த நிலையில் முறையான முன்னறிவிப்பு இன்றி இன்று மாலை அதிரை நகராட்சி கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படுவதாக அதிரை பிறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நகராட்சி ஆணையரிடம் செல்போனில் விசாரித்தபோது, தினகரன் என்ற நாளிதழில் 15 நாட்களுக்கு முன்பே விளம்பரம் செய்யப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
தனக்கு அப்படி விளம்பரம் செய்தது தெரியாது மேடம், எந்த தேதியில் நடைபெறுகிறது என்று விசாரித்தபோது அழைப்பை அவர் துண்டித்துவிட்டாராம். மீண்டும் தொடர்புகொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை. இதற்கிடையே நகராட்சியில் தற்போதே ஏலம் விடும் நடைமுறைகல் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆளும் கட்சி மற்று எதிர்கட்சி கவுன்சிலர்கள் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள் எங்களுக்கே தெரியாதே என அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். நகராட்சி நோட்டீஸ் போர்டில் கூட எந்த அறிவிப்பும் ஒட்டப்படவில்லை என்ற அவர்கள், 90 சதவீத கவுன்சிலர்களுக்கு இது தெரியாது என்றும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நகராட்சி கடைகளை வழங்கும் முயற்சி இது என கூறினர்.
வரி செலுத்துவதற்காக மட்டும் ஆட்டோ, நோட்டீஸ், வீடு வீடாக சென்று விளம்பரம் செய்யும் நகராட்சி ஒரே ஒரு நாளிதழில் மட்டும் விளம்பரம் செய்தால் போதுமா? உள்ளூர் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், ஆட்டோ அறிவிப்புகள் மூலம் தெரிவிக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுமக்கள், வியாபாரிகளுக்கு முறையாக அறிவிப்பு செய்யாமல் தங்களுக்குள் கடைகளை ஆளுங்கட்சியினர் பிரித்துகொள்ளும் முயற்சியில் இவ்வாறு அவசர கெதியில் ஏலம் நடத்தப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இந்த ஏலத்தை ஒத்தி வைத்து முறையாக விளம்பரம், அறிவிப்பு செய்து ஏலம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்