இது குறித்து அதிரை ஜமாத்துல் உலமா சபை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "அகிலம் போற்றும் அதிரை வாசிகளுக்கு அதிரை ஜமாஅத்துல் உலமா சபையின் ஓர் அன்பான வேண்டுகோள்..!
கடந்த நாட்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட கணமழை பாதிப்புகளை நாம் அறிந்துள்ளோம், அப்பகுதியில் உள்ள மக்களின் துயர் துடைப்பில் நாமும் பங்கெடுக்கும் விதமாக நம்மால் முடிந்த ஒரு உதவியாக இன்ஷா அல்லாஹ் நாளை 22/12/2023 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு வசூல் செய்யப்படும் வாளி வசூல்களை அப்பகுதி மக்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனவே அனைத்து சகோதரர்களும் தாராளமாக நிதியுதவி செய்வோம், அதன் பொருட்டால் அல்லாஹு தஆலா நம்மையும் அது போன்ற பேராபத்துகளிலிருந்து காப்பாற்றுவானாக ஆமீன்." என்று கேட்டுக்கொண்டு உள்ளது.