அதிரையில் மாடுகளை பிடிக்கும் நகராட்சியின் நவீன திட்டம்.. ஜாவியா சாலையில் நடந்த சம்பவம்

Editorial
0
அதிரை ஜாவியால் சாலையில் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில் பல மாதங்களாக மூடப்படாமல் கிடக்கிறதும் இந்த நிலையில் இன்று காலை பசு ஒன்று அந்த கால்வாயில் விழுந்து வெளியேற முடியாமல் தவித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்புகொண்டு தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த ஊழியர்கள் கயிறு கட்டி இழுத்து பசுவை மீட்டனர்.

மூடப்படாமல் கிடக்கும் வடிகாலில் குழந்தைகளும் விழும் அபாயம் உள்ளது. எனவே பெரிய அசம்பாவீதம் நடைபெறும் முன் இங்கு மூடி போட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிரையில் கட்டுப்பாடின்றி நடமாடும் மாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வரும் வேளையில் இது மாடுகளை பிடிக்கும் புதிய முயற்சியா என்ற கேள்வியும் நகைச்சுவையாக எழுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...