அதிரை இமாம் ஷாபி நிலம்.. உச்சநீதிமன்ற வழக்கிற்கு ₹5 லட்சம் ஒதுக்க தீர்மானம் கொண்டு வரும் நகராட்சி

Editorial
0
அதிரை நகர சபை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இமாம் ஷாபி பழைய பள்ளி இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் வழக்கு தொடர மக்கள் வரிப்பணத்த்தில் ரூ.5 லட்சம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானம் தயாரித்துள்ளது.

இது குறித்து தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, "அதிராம்பட்டினம் நகரட்சிகுட்பட்ட புல எண்.313/2-ல் 0.21.0 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஹசன் வானொலி பூங்கா என்ற வகைபாட்டுடைய நகராட்சி சொந்தமான நிலத்தினை இமாம் ஷாபி மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதை அகற்றிட தொடரப்பட்ட வழக்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண். W.A(MD)No.362/2021 4 நாள்.21.11.2023 -ல் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினால் 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பினை அகற்றி நகராட்சியிடம் இடத்தினை ஒப்படைக்குமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழக்கறிஞரின் ஆலோசனையின் படி பள்ளி நிர்வாகிகள் உச்சநீதிமன்ற மேல்மறையீடு தாக்கல் செய்யும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாண்பமை டெல்லி உச்சநீதிமன்றத்தில் CAVEAT தாக்கல் செய்து வழக்கு நடத்துவதற்கு உத்தேச செலவினமாக ரூ.5,00,000/- இலட்சம் வரையிலும் பொது நிதியிலிருந்து வழங்க மன்ற அனுமதிக்கு வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு: மாண்பமை உச்சநீதிமன்றம் டெல்லியில் CAVEAT தாக்கல் செய்து வழக்கு நடத்துவதற்கு உத்தேச செலவினமாக பொது நிதியிலிருந்து ரூ. 5,00,000/- இலட்சம் வழங்க மன்றம் ஏற்கலாம். மேற்கண்ட பணியின் அவசர அவசியம் கருதி நகர்மன்றத் தலைவரின் முன்அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட இவ்வலுவலக நடவடிக்கைகளை மன்றம் அங்கீகரிக்கலாம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...