அதிரை புதிய நகராட்சி கட்டிடம்.. ₹35.8 லட்சம் பொதுநிதியில் ஒதுக்க நாளை நகர சபையில் தீர்மானம்

Editorial
0
அதிரை நகர சபை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் புதிய நகராட்சி கட்டிட இடத்துக்கு ரூ.35,83,420 ஒதுக்க தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து தீர்மான நகலில் குறிப்பிட்டு உள்ளதாவது, "அதிராம்பட்டினம் நகராட்சிகுட்பட்ட புல எண்434/2-ல் உள்ள 0.13.50 ஹெக்டேர் பரப்பளவு உள்ள அரசு புறம்போக்கு பயணியர் விடுதி என வகைபாடு கொண்ட நிலத்தினை புதிய நகராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு நில உரிமை மாற்றம் செய்ய பரிந்துறை செய்யதுள்ள நிலையில், வருவாய் துறை பேரிடர் மேலண்மைத்துறை நில முடிவு அலகு (நிமு.5(2)] பிறிவு கீழ் அரசாணை நிலை எண்.566 நாள்.23.11.2023-ல் குறிப்பிட்டட உள்ள நில மதிப்பு சதுர மீட்டர் ஒன்றிக்கு ரூ.2,394/- என்ற விகிதத்தில் நில உரிமை மாற்றம் செய்யவுள்ள பரப்பளவு 0,13.50 ஹெக்டேர் 1350 சமீ x 2394 = 32,31,900 ஆகும். மேற்படி நிலத்தினை புதிய நகராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டடம் கட்டுவதற்கு அதிராம்படினம் நகராட்சிக்கு நில உரிமை மாற்றும் செய்ய வருவாய் நிலை ஆணை 24-இன் கீழ் ரூ.32,31,900/- (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சத்து முப்பத்தொன்றாயிறத்து தொள்ளாயிரம் மட்டும்) நில மதிப்பு தொகையாக நிர்ணயித்து அரசு ஆணையிட்டள்ளது. 

மேலும் மாவட்ட ஆட்சிதலைவர் தஞ்சாவூர் அவர்கள் புலத்தணிக்கையில் குறிப்பிட்டுள்ள நெடுஞ்சாலைக்குட்பட்ட RCC கட்டடத்தின் கட்டட மதிப்பு ரூ.3,51,520/- என்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் படி நில மாற்றம் செய்வதற்கான தொகை மற்றும் அந்நிலத்தில் அமைந்துள்ள பழைய பயணியர் விடுதி RCC கட்டடத்தின் மதிப்பு தொகை ரூ.32,31,900+3,51,520 = 35,83,420/-ஐ பொது நிதியிலிருந்து வழங்க மன்ற அனுமதிக்கு வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு: புதிய நகராட்சி கட்டடம் கட்ட நில மாற்றம் செய்வதற்கான தொகை மற்றும் நிலத்தில் உள்ள பழைய பயணியர் விடுதி RCC கட்டடத்தின் மதிப்பு தொகையினையும் ஆன ரூ.35,83,420/-ஐ பொது நிதியிலிருந்து வழங்க மன்றம் ஏற்கலாம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...