அதிரை ECR சாலையில் மாடுகளால் விபத்து.. பைக்கில் மோதி கீழே விழுந்த முதியவர்

Editorial
0
அதிரையில் கால்நடைகள் வளர்த்து வரும் பொது மக்கள், தங்களது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை வீடுகளில் கட்டிப்போடாமல், பிரதான சாலையில் தினமும் சுற்றி திரிய விடுகிறார்கள். இதனால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகிறது. பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் சாலைகளில் சானம் இடுவதால் சுகாதார கேடு மற்றும் சாலை விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக நாம் எச்சரித்து வந்தோம்.

இது தொடர்பாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் இதையெல்லாம் கால்நடை வளர்ப்பவர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள். இந்த நிலையில் அதிரை ஈ.சி.ஆர். சாலை, மெயின் ரோடு, பட்டுக்கோட்டை சாலை, வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, சி.எம்.பி. லேன் சாலை போன்ற இடங்களில் மாடுகள் சாலையை மறித்து சூழ்ந்து நிற்கின்றன.

இந்த நிலையில், இன்று மாலை அதிரை ஈ.சி.ஆர். சாலையில் கல்லூரி அருகே குறுக்கே புகுந்த மாடு மீது பைக் மோதி, அதை ஓட்டி வந்த முதியவர் கீழே விழுந்தார். அவரை அங்கிருந்த மக்கள் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிரை நகராட்சி துரித நடவடிக்கை எடுத்து மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...