அதிரையில் தொடரும் "போஸ்டர் போர்".. கடந்த ஆண்டு அஸ்லம்! இன்று குணசேகரன் - வீதிக்கு வந்த திமுக உட்கட்சிப் பூசல்

Editorial
0
அதிரை நகராட்சி துணை தலைவராக பதவி வகித்து வருபவர் இராம.குணசேகரன். திமுக நகர செயலாளராக பல ஆண்டுகளாக இவர் பதவி வகித்து வருகிறார். அதிரையில் திமுக 2 அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், இவரை நகர செயலாளர் பதவியில் இருந்தே நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவிற்கு வாக்களிக்கும் பொதுமக்கள் என்று குறிப்பிட்டு ஊரின் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிரையில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் மதக்கலவரத்தை தூண்டுவதாக ஊர் மூழுவதும் இன்று பொதுமக்கள் என்ற பெயருடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிரை காவல் ஆய்வாளருக்கு அஸ்லம் கடிதம் எழுதினார். 
அதில், "நான் முன்னாள் பேரூராட்சித் தலைவராகவும், என் மனைவி வார்டு 02 உறுப்பினராகவும் இருந்துவரும் நிலையில் இணைப்பில் கண்டுள்ள சுவர் போஸ்டர், இன்று (09-03-2022) என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதிலுள்ள வாசகங்கள் என் நற்பெயருக்கும், சமூக சேவைகளுக்கும், கட்சி, அரசியல் மற்றும் மக்கள் பணிகளுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்டு விஷம பிரச்சாரம் ஒரு சில சமூக விரோதிகளால் செய்யபடுகிறது. 

இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும், அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.இதை உடனடியாக காவல்துறை கவனத்தில் எடுத்துக்கொண்டு சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சமூக நல்லிணக்கத்துடன் கடந்த இருபதாண்டுகளாகப் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் செயல்பட்டு வரும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." எனக்குறிப்பிட்டு இருந்தார். திமுக உட்கட்சிப் பூசலால் இரு நிர்வாகிகளிடையே ஏற்பட்டு இருக்கும் மோதலால் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...