அதிரை முஸ்லிம்களுக்கு பேரிடி.. உரிமைகளை பறிக்க சதி - முன்னாள் சேர்மன் அஸ்லம் எச்சரிக்கை

Editorial
0
அதிரையில் இன்று நடைபெற உள்ள நகர சபை கூட்டத்தில் 3 கிராமங்களை இணைக்கும் தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள்.

அதில், "நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.)ஏரிப்புரக்கரை, 2) மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கு அதிரை முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான அஸ்லம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இந்த தீர்மானம் அதிரை முஸ்லிம்களுக்கு பேரிடியாக இருக்கும். முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை. மாற்று மத சகோதரர்களும் பாதிக்கப்பட்டுவார்கள். அதிரையில் வெள்ளிக்கிழமை விடுமுறை போன்றவை மாற்றப்படும் நிலை ஏற்படும்." என்றார்.
Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...