அதிரையில் பைக் திருடிய கச்சல் திருடனின் தெளிவான முகம் சிக்கியது

Editorial
0
அதிரையில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருக்கும் பைக்குகள் திருடப்படுபதாக புகார்கள் வந்தவகையில் உள்ளன. இந்த நிலையில் இன்று மேலும் ஒரு பைக் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

அதிரை கடற்கரைத் தெருவில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வெள்ளை வேட்டி அணிந்து கச்சல் கட்டிய மர்ம நபர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்கை தள்ளிக்கொண்டே திருடிச் சென்றுள்ளார். இது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக பைக் உரிமையாளர் முஜிப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வீடியோவுடன் அதிரை பிறையில் செய்தி வெளியிட்டோம். இந்த நிலையில், மற்றொரு சிசிடிசி கேமராவில் திருடன் சுவர் ஏறிக் குதிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...