அதிரையில் விண்ணை முட்டிய போராட்ட முழக்கம்.. பாலஸ்தீனுக்காக பெருந்திரளாக வந்த மக்கள்

Editorial
0
பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தியும், பாலஸ்தீனும் இந்தியா நிற்கக்கோரியும் அநீதிக்கு எதிரான பேரமைப்பு அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் பாலஸ்தீன் - இஸ்ரேல் போரினால் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்த தேவையான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ளாத நிலையில், மருத்துவமனைகளின் மீதும், அகதிகள் முகாம்களின் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனில் தினந்தோறும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்திடவும், இந்திய அரசு பாலஸ்தீனுடன் துணை நிற்கவும் வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் மௌலவி சம்சுத்தீன் காசிமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், மனிதாபிமானம் கொண்ட அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள், பல அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முஹல்லா ஜமாத்துகளின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் சாலையில் வழிவிட்டு நெறியோடு இந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...