அதிரை சேர்மன் வாடி - செக்கடி மேடு பாதை மூடல்.. மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தல்

Editorial
0
அதிரை முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அதிரை 6வது வார்டுக்கு உட்பட்ட சேர்மன் வாடியில் இருந்து செக்கடி மேடு செல்லும் பாதையோரம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாலையோரம் வடிகால் குழிகள் தோண்டப்பட்டன. இந்த நிலையில் தற்போது வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி அடைக்கப்பட்டு உள்ளது. எனவே சேர்மன் வாடி - செக்கடி மேடு பாதை வழியாக செல்வோர் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...