அதிரையுடன் கிராமங்களை இணைக்கும் தீர்மானம் நிறைவேறியது.. 7 கவுன்சிலர்கள் மட்டுமே எதிர்ப்பு!

Editorial
0

அதிரையில் இன்று நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் 3 கிராமங்களை இணைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று மாலை 4 மணியளவில் கூடிய நகர சபை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில், "நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புரக்கரை, 2) மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அதிரையோடு புதிதாக கிராமங்களை இணைப்பதை எதிர்த்து, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளது. இந்த நிலையில் மாலை கூட்டம் கூடிய நிலையில், அதிரையில் திமுக கவுன்சிலர்களான 2 வது வார்டு கவுன்சிலரான முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்களின் மனைவி, 11 வது வார்டு கவுன்சிலர் சரீப் அவர்களின் மனைவி, 6 வது வார்டு கவுன்சிலரான காமில் அவர்களின் மனைவி, திமுக கவுன்சிலர் மன்சூர், 7 வது வார்டு முஸ்லிம் லீக் கவுன்சிலர் முபீன் அவர்களின் மனைவி, 13 வது வார்டு எஸ்டிபிஐ கவுன்சிலர் அசார் அவர்களின் மனைவி, மமக கவுன்சிலர் மாலிக் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். 

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி முழு கிராமங்களையும் சேர்க்காமல் பிலால் நகர், ஆதம் நகர் போன்ற பகுதிகளை மட்டும் இணைக்க வலியுறுத்தினார். 12 வது வார்டு திமுக கவுன்சிலர் சைப் அவர்களின் மனைவி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

நகர துணைத் தலைவர் குணசேகரனும் 3 கிராமங்களையும் முழுமையாக இணைக்கப்போவது இல்லை என்றும், குறிப்பிட்ட பகுதிகளையே இணைக்கப்போவதாகவும் விளக்கம் அளித்து உள்ளார். பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...