அதிரையின் 7 முஹல்லா ஜமாத்துகள் போட்ட கையெழுத்து.. கிராமங்களை இணைப்பதை எதிர்த்து அனைத்து முஹல்லா மனு

Editorial
0
அதிரையுடன் 3 கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 முஹல்லா ஜமாத்துகளின் நிர்வாகிகள் கையெழுத்திட்ட மனுவை நகராட்சி ஆணையருக்கு அனைத்து முஹல்லா வழங்கியுள்ளது.

அந்த மனுவில், "அதிராம்பட்டினம் கடந்த 17.12.2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள்கூட முழுமையாக முடியவில்லை. இந்நிலையில் நகரில் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலை வசதிகள் முழுவதும் நிறைவு பெறாத நிலை இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் போர்டு அமைந்து அதன் பதவிக்காலம் முழுமையாக இன்னும் முடியவில்லை. மேலும் இன்று நடைபெற உள்ள நகராட்சி மன்றம் உறுப்பினர்கள் கூட்டத்தில் பொருள் 39-ல் குறிப்பிட்டுள்ள நமதூர் அருகாமையில் உள்ள 3 கிராமங்களை அதிரை நகராட்சியில் இணைப்பது சம்மந்தமாக விவாதிக்க இருப்பதாக அறிகிறோம். அப்படியாயின் தற்போது நமதூரின் தேவைகள் முழுமையடையாமல் இருப்பதாலும், அதிரை நகராட்சியின் தற்போதுள்ள எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்துவரும் மக்கள் தொகை மற்றும் வருவாய்களும் போதுமானது என, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகம் கருதுகிறது.

எனவே தற்போது மேற்படி பொருள் 39-ல் உள்ள அதிரை அருகாமை கிராமங்களான 3) மழவேனிற்காடு 31 ஏரிப்புறக்கரை 31 நரிக்சீரம் ஆகிய ஊராட்சிகளை அதிராம்பட்டினம் நகராட்சியில் இணைக்கும் தீர்மானத்தை தற்போது கைவிடுமாறு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...