அதிரை: பாலஸ்தீனில் கொல்லப்படும் குழந்தைகளுக்காக SDPI ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கிய அதிரை குழந்தைகள்

Editorial
0
பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த ஐ.நா. மன்றம் தலையிட வலியுறுத்தி. அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வரும் பாலஸ்தீன் - இஸ்ரேல் போரினால் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்த தேவையான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ளாத நிலையில், மருத்துவமனைகளின் மீதும், அகதிகள் முகாம்களின் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனில் தினந்தோறும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்திடவும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க் குற்றவாளியாக அறிவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி SDPI கட்சி நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
அதன் ஒரு பகுதியாக அதிரையில் SDPI கட்சியின் நகர தலைவர் Z.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...