அதிரை மக்களே.. 8வது படித்தாலே போதும் - வேலைவாய்ப்பு முகாமுக்கு சிஸ்யாவின் வாகனத்தில் இலவசமாக செல்ல முன்பதிவு செய்யுங்கள்

Editorial
0
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பட்டுக்கோட்டையில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 8வது, SSLC / HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்வி தகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் இவ்வேலை வாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணி வாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலை நாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலை நாடுநர்களுக்கும், வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் இலவசமாகும். மேலும் தகவலுக்கு 04362237037 இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, ஏனாதி , பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் _614615 -Landmark:https://maps.app.goo.gl/iXbHuYGwpN2DwxQYA “ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக இந்த முகாமில் பங்கேற்க இருப்பவர்கள் சுய விபர குறிப்பு (RESUME), கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஃபார்மலான உடையணிந்து தாங்கள் படித்த துறை சார்ந்த முக்கிய விசயங்களை படித்துவிட்டு நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டால் வேலை நிச்சயம்.

 அதிரை இளைஞர்கள் இதில் பங்கேற்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு (SISYA) சார்பில் நாளை வாகன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பயனடைய விரும்புவோர் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தும் முன்பதிவு செய்யலாம்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...