அதிரையை அசிங்கமாக்கி வரும் காக்கையார்.. சாந்தி சமாதானத்துடன் சமூக நிழல் எடுத்த பேமெண்ட் பேட்டி

Editorial
0
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று  நிலவட்டுமாக என்ற பிரார்த்தனையோடு, இன்று அதிரை நிஜம் சார்பாக நாம் யாரிடம் பேட்டி காண இருக்கிறோம் என்றால், "அழகாக சட்டை போட்டுக்கொண்டு வெளியே செல்பவர்களை அசிங்கமாக்கிவிடும் காக்கையாரோடுதான் பேட்டிகாண இருக்கிறோம்."

நிஜம் நிருபர்: அண்ணே எப்படி இருக்கீங்க. வீட்ல புள்ள குட்டியெல்லாம் சுகமா? நீங்கள் ஏன் இவ்வாறு செய்து மக்களை சிரமப்பட வைக்கிறீர்கள்?

காக்கையார்: எங்களை மக்கள் சரியாக கவனிக்கவில்லை.

நிஜம் நிருபர்: என்ன பிரச்சனை என சற்று தெளிவாக கூறுங்கள்.

காக்கையார்: எங்களை விரட்டி விடுகின்றனர்.  எங்களுக்கு சரியாக உணவளிப்பதும் இல்லை. இதனால்தான் கண்டதை எல்லாம் சாப்பிட்டு நாங்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வீதியில் கிடைப்பதையெல்லாம் திண்கிறோம்.

நிஜம் நிருபர்: இது போன்று வீதிகளில் கிடைப்பதையெல்லாம் திண்பதால் நீங்கள் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள்? 

காக்கையார்: பல கஷ்டங்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். முன்பெல்லாம் பாட்டி வடை சுடுவார்கள். அங்கு சென்று எங்கள் வயிற்றை நினைத்துக்கொண்டோம். ஆனால் தற்பொழுது பாட்டியும் இல்லை, வடையும் இல்லை. சாலை ஓரங்களில் ஏதாவது உணவு கிடைக்கும், சாப்பிடலாம் என்றால் பாலிதீன் பைகளே உள்ளன. இந்த லட்சனத்தில் இது நகராட்சியாம். 3 கிராமங்களை வேற இணைக்கப்போறாங்களாம். வேறு வழியின்றி கண்டதை உண்டு வாழ்ந்து வருகிறோம். அதன் விளைவு எங்கள் இனத்தவர்கள் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நிஜம் நிருபர்: சரி உங்களின் கோரிக்கை தான் என்ன?

காக்கையார்: எங்களுக்கு உணவு வேண்டும். மாடியில் வத்தல் காயப்போட வேண்டும். பாட்டிகள் வீட்டு கிச்சனில் வடை சுடாமல் கொல்லையில் வைத்து வடை சுட வேண்டும். இதை நிறைவேற்றினால் அவர்களை அசுத்தம் செய்ய மாட்டோம். இல்லையென்றால் எங்களின் இந்த போராட்டம் தொடரும்.

நிஜம் நிருபர்: நீங்க சுடாத வடையை விடவா அண்ணே..

காக்கையார்: காசு வாங்கிட்டுதானே பேட்டி எடுக்க வந்த.. என்ன கிராஸ் கேள்வி எல்லாம் கேட்குற. நான் எழுதிக்கொடுத்ததை மட்டும்தான் கேட்கனும் சரியா?

நிஜம் நிருபர்: ஆமாங்கய்யா.. சாரி! இனி கேட்க மாட்டேன். என் பிழைப்புல மண்ண அள்ளி போட்டுறாதீங்க.

காக்கையார்: உனக்கெல்லாம் வெட்கமே இல்ல..

நிஜம் நிருபர்: காசு கிடைக்குது. எதுக்குங்க வெட்கம்? வேற ஏதாச்சும் வேலை இருந்தாலும் சொல்லுங்க. செய்றேன்.

காக்கையார்: இருந்தால் சொல்றேன். அடுத்த பிரச்சனை வரும்போது முட்டுகொடுக்க கூப்டுறேன். வந்திரு..

நிஜம் நிருபர்: சமூக நலனை விட சுய நலனே முக்கியம்ணே.. ஓடி வந்துருவேன். கட்டப்பஞ்சாயத்தா இருந்தாலும் சொல்லுங்கண்ணே.. முடிச்சி கொடுப்போம்.

காக்கையார்: என் கிட்டயேவா.. நான்லாம்.. சரிவிடு.. மக்களுக்கு உண்மை தெரிஞ்சுடும்.

நிஜம் நிருபர்: அண்ணே.. கூகுள் பேல காசு போட்டுவிட்ருங்க.. தீபாவளி போனசோட சேர்த்து..

குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...