அதிரைக்கு பெருமை.. மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் நடுத்தெரு அரசு பள்ளி மாணவர் சாதனை

Editorial
0

அதிராம்பட்டினம்: மாநில இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவர் சிறப் பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

மதுரை டெகத்லான் ஸ்போர்ட்ஸ் சார்பில், மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி மதுரை ஜெனித் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவரும் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான ஆ.அஜ்முதீன் அவர்களின் மகனுமான அ.ஆத்திப் அகமது கலந்துகொண்டார். 

இவர், 11 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2 ஆம் இடம் பிடித்தார். அதேபோல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு சாதனை நிகழ்த்தினார். இதனை அடுத்து, சாதனை மாணவர் ஆத்திபை  பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.மாலதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...