அன்றே எச்சரித்த அதிரை பிறை.. உயரமான சி.எம்.பி லேன் சாலையால் அனுபவிக்கும் மக்கள்! தேங்கிய மழை நீர்

Editorial
0
அதிரையின் சிஎம்பி லேன் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சிளித்து வந்தது. பல ஆண்டுகளாக இது குறித்து கோரிக்கை வைத்த நிலையில் ஒரு வழியாக மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு  நடுவிக்காடு முதல் சி.எம்.பி. லேன் வரை ₹2.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த மார்ச் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை இந்த சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். 

ஆனால் குண்டும் குழியுமாக இருந்த பழைய சாலையை முழுமையாக தோண்டி எடுக்காமல் லேசாக கீரிவிட்டு அதன் மேலேயே சாலை அமைத்தார்கள். பழைய சாலையை தோண்டாமல் அதன் மீதே புதிய சாலை அமைப்பதால் ஒவ்வொரு முறையும்  பாதை உயரமாகவும் வீடுகள் தாழ்வாகவும் செல்லும். இதனால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அப்போதே எச்சரித்தோம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "சென்னையில் சாலை பணிகளை இரவில் ஆய்வு செய்து, ‘மில்லிங்’ (பழைய சாலையை தோண்டாமல்) செய்யாமல் சாலை போடக் கூடாது அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச்  ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்." என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், எதையும் பின்பற்றாமல் சாலை அமைத்த காரணத்தால் வீட்டு வாசல்களில் மழை நீர் தேங்கி பலரும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தலம் அமைத்து உள்ளார்கள். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக புதுமனைத்தெரு சிமெண்ட் இணைப்பு சாலையில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. சி.எம்.பி லேன் சாலை உயரமாகி, புதுமனைத்தெரு இணைப்பு சாலை தாழ்வானதாலேயே இவ்வாறு மழை நீர் தேங்கியுள்ளது. இப்படியெல்லாம் பிரச்சனை ஏற்படும் என்றுதான் ஏப்ரல் மாதமே அதிரை பிறை எச்சரித்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...