அதிரை மக்களே காரணம்.. அதிரை பிறை ஆசிரியரின் புகாருக்கு மின்சார வாரியம் கடிதம் மூலம் விளக்கம்

Editorial
0
மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் ஜூலை மாதம் பருவகால பராமரிப்பு பணிகளுக்காக காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை அதிராம்பட்டினம், மதுக்கூர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர் காடந்தங்குடி, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று அறிவிப்பு வெளியானது.

சொன்னதை போன்றே காலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பில் இருந்ததைபோல் 5 மணிக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை. ஒவ்வொரு மாதமும் இதே நிலை தொடர்வதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

சொன்ன நேரத்தில் மின் இணைப்பை துண்டிக்கும் மின் வாரியம் சொன்ன நேரத்தில் மின் இணைப்பை வழங்குவதில் என்ன பிரச்சனை? என்ற கேள்வியை முன்வைத்து அதிரை பிறை ஆசிரியர் நூருல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புகாரளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உடனே மின்வாரியம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் நமது புகார் தொடர்பாக அதிரை மின்வாரிய உதவி மின் பொறியாளர் எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளித்து இருக்கிறார். தமிழ்நாடு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமே நமக்கு இந்த கடிதத்தையும் அனுப்பியுள்ளது. அந்த கடிதம் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...