அதிரையிலிருந்து சென்று மாவட்ட ஆட்சியரை பெருந்திரளாக சந்திக்க 2வது வார்டு மக்கள் முடிவு.. நகராட்சிக்கு நெருக்கடி

Editorial
0
அதிராம்பட்டினம் 2வது வார்டு கவுன்சிலராக முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்களின் மனைவி இருந்து வருகிறார். தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராக இருந்து வரும் இவருக்கும் அதிரை திமுக நகராட்சி செயலாளரும் நகராட்சி துணை தலைவர் இராம.குணசேகருக்கும் இடையே பல ஆண்டுகளாக உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது. அதிரையில் திமுகவும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்கள் வார்டை நகராட்சி புறக்கணிப்பதாக கூறி சில மாதங்களுக்கு முன் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அதிரை 2வது சி.எம்.பி லேன் பகுதியில் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதி மக்களே தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சாலை, கழிவு நீர் வடிகால், தெரு விளக்குகள், சி.எம்.பி வாய்க்கால் பராமரிப்பு, வெறிநாய்களை கட்டுப்படுத்துவது போன்ற அடிப்படை தேவைகள் எதையும் நகராட்சி முறையாக செய்யவில்லை என்றும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று இஷா தொழுகைக்கு பிறகு ஹனீப் பள்ளியில் 2வது வார்டு மக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினர். இந்த கூட்டத்தில் முன்னாள் சேர்மனும் இரண்டாவது வார்டு கவுன்சிலரின் கணவருமான அஸ்லம் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த கூட்டத்தில் நகராட்சிக்கு கொடுக்கப் போகும் மனு அனைவர் முன்னிலையிலும் வாசிக்கப்பட்டு, மக்களின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப சில திருத்தங்கள் செய்யப்பட்டது. 
இதில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. இதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுமத்தில் இல்லாத வார்டு மக்களின் மொபைல் எண்களை சேர்ப்பது.
2.நகராட்சிக்கான மனுவை திருத்தம் செய்து இரண்டாவது வார்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரி செலுத்துவோரின் கையொப்பம், பெயர், முகவரி மற்றும் தொலைப்பேசி எண்களை வாங்க வேண்டும்.
3. 3/10/2023 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு ஹனீப் பள்ளி அருகில் கூடி சிறிது நேர உரையாடலுக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம் சென்று ஆணையரிடம் மனு கொடுக்க வேண்டும். (முன்னே கொடுத்த மனு மற்றும் மற்ற நகல்களுடன்)
4. 9/10/2023 அன்று காலை (வாகனம் புறப்படும் நேரம் பின்பு அறிவிக்கப்படும்) 2வது வார்டு மக்கள் பெருந்திரளாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் மற்றும் ஆர்.டி.எம்.ஏ.வை சந்தித்து மனு அளிக்க வேண்டும்.

இந்த முடிவுகள் அனைவராலும் ஏற்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...