அதிரை தாலுக்காவானால் இவ்வளவு நன்மைகளா? முழு விளக்கம்! உடனே லிங்கை கிளிக் பண்ணி ஸ்டாலினுக்கு மெயில் பண்ணுங்க

Editorial
0


அதிரை தாலுக்காவாக அதிரை பிறையின் மெயில் அனுப்பும் திட்டத்தின் கீழ் சப்மிட் பட்டனை கிளிக் செய்து முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மெயில் அனுப்புங்கள்.
மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இது தாலுகா என்று அழைக்கப்படுகிறது. மாவட்ட வருவாய் நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் வட்டாட்சியர்.

இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். 

இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகம் எனப்படுகிறது. அதிரைக்கு நகராட்சி அலுவலகம் வந்தால் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்றவை, ரேசன் அட்டை தொடர்பான பணிகள், பட்டா, சிட்டா ஆவணங்கள் போன்றவற்றுக்காக பட்டுக்கோட்டை செல்லாமல் அதிரையிலேயே வேலையை முடிக்கலாம்.

முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை போன்ற பல்வேறு அரசு உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகளை அதிரையிலேயே பெற முடியும். வட்டாட்சியர் நமதூரிலேயே இருந்தால் அரசு தொடர்பான பணிகள் அவரது நேரடி கண்காணிப்பில் நடக்கும். அவரை எளிதில் அணுகி தேவைகளை கேட்டு பெற முடியும். இதற்காக உள்ள முகவர்களை அணுகி கூடுதல் தொகையை வழங்க வேண்டிய தேவை இருக்காது.

தற்போது அதிராம்பட்டினத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பட்டுக்கோட்டைக்கு இதற்காக செல்கிறார்கள். நமதூரிலேயே பெரும்பாலான அரசு சார்ந்த வேலைகள் முடியும். அதுமட்டுமின்றி பல ஊர்களை சேர்ந்தவர்கள் அதிராம்பட்டினம் வருவார்கள். அதிராம்பட்டினத்தை மையமாக வைத்து கூடுதல் பேருந்து சேவைகள் கிடைக்கும். அதிகளவிலான மக்கள் நமதூருக்கு வந்தால் உள்ளூர் வியாபாரம் பெருகும். தொழில் வளர்ச்சியடையும். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

அரசு நலத்திட்டங்கள், பொதுப்பணி திட்டங்கள், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம் போன்றவற்றையும் கேட்டுப்பெற முடியும். தாலுக்காவாக அதிரை மாறினால் இங்குள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் தாலுக்கா அந்தஸ்து இருக்கும் ஊர்களுக்கு இதுபோல் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.

தாலுகா பணிகள்:
 • மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
 • கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
 • வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
 • வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு க்ட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
 • மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரி ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.

வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் :
 • வட்ட அளவில் பணியாற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் இதர வருவாய் பணியாளர்களின் பணிகளைக் கண்காணித்தல் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்களின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.
 • பயிர் மேலாய்வு செய்தல்.
 • நில அளவைப் பணிகளை ஆய்வு செய்தல்.
 • நில அடமான இனங்களில் நில மதிப்பு ரூ.2000-க்கும் மிகைப்படாத இனங்களின் மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ ஏக்கர் நஞ்சை பரப்பளவிற்கு மேற்படாத இனங்களின் ஆணை பிறப்பித்தல்.
 • விலை மதிப்பு அற்ற நிலங்களில் வீட்டு மனை கோரிவரும் மனுக்கள் மீது அணை வழங்குதல்.
 • இயற்கை இடர்பாடுகள், தீ விபத்து. வெள்ளம், புயல் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிவாரணம் வழங்க தக்க நடவடிக்கை எடுத்தல்.
 • நில ஆக்ரமணச்சட்டம் 1905ன் படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரணமங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல்.
 • பி.மெ.மோ இனங்களில் தீர்வை மற்றும் அபராதம் விதித்து ஆணையிடுதல்.
 • கிராமச் சாவடி கால்நடைப்படி, கல் இருப்பு, 2 சி மரங்கள், நிலபராதீனம் இனங்கள், நில ஒப்படை இனங்கள், குத்தகை தண்ணீர் தீர்வை இனங்கள், ஆக்ரமணம், அரசு புறம்போக்கு நிலங்கள், தீர்வை விதிக்கப்பட்ட மற்றும் தீர்வை விதிக்கப்படாத நிலங்கள் இவைகளைத் தல ஆய்வு செய்தல்.
 • முதியோர் உதவித்தொகை மற்றும் இதர நலத் திட்ட உதவி வழங்குதல்.
 • நில உரிமை மாற்ற இனங்களில் ஆணை பிறப்பித்தல்.
 • நிலம் கையகப்படுத்தும் இனங்களில் நில மதிப்பு ரூ.25000 க்கும் மிகைபடாத இனங்களில் தீர்ப்பு வழங்குதல்.
 • நில ஒப்படை பராதீன இனங்களில் வதிமுறை மீறப்பட்ட இனங்களில் உரிய நடவடிக்கை எடுத்தல்.
 • பாசன ஆதாரங்கள் மற்றும் மழை மானிகளை ஆய்வு செய்தல் பாசனம் குறித்து தகராறு இனங்களைத் தீர்த்து வைத்தல்.
 • வருவாய் நிலை ஆணை பத்தி 11சி-ன் கீழ் பாசன ஆதாரங்களீல் இருந்து விவசாயம் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்தலை முறைபடுத்தல் தொடர்பான பணிகள்.
 • பல்வேறு பாசனச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தல்.
 • அரசுக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேர வேண்டிய தொகைகளை வருவாய் வசூல் சட்டப்படி வசூலித்தல்.
 • நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிலவரி கடன் ஊராட்சி வரி, சர்வே கட்டணம் வேளாண்மை வருமான வரி, நகர்புற நிலவரி நீதி மன்றக் கட்டணம், வேளாண்மை வருமானவரி நகர்புரநிலவரி நீதி மன்றக் கட்டணம், முத்திரை கட்டணம், வறியவர் வழக்குக் கட்டணம் மற்றும் பல்வேறு துறைகளிடம் இருந்து வரப் பெற வேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலைத் துரிதப்படுத்துதல்.
 • கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் வரி வசூல் கணக்கு மற்றும் இதர கணக்குகளை ஆய்வு செய்தல்.
 • ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்குகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
 • வேளாண்மை நிலங்களுக்கு நியாயமான குத்தகை வாரம் நிர்ணயித்தல்.
 • நத்தம் மனை வரி நிர்ணயித்தல்.
 • அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக நீர் கொண்டு செல்ல பாதைக் கட்டணம் நிர்ணயித்தல்.
 • தண்ணீர் தீர்வை இனங்களின் ஆணை பிறப்பித்தல்.
 • குத்தகை உரிமைப் பதிவு ஆணை பிறப்பித்தல்.
 • கிராம உதவியாளர் பணி நியமணம் செய்தல்.
 • கிராம நிர்வாக அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் தண்டனை அளித்தல்.
 • கிராம நிர்வாக பணியமைப்பு தொடர்பான பணிகள்.
 • கிராம உதவியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் ஆணை பிறப்பித்தல்.
 • கிராம நிர்வாக அலுவலர்களின் விடுப்பு மனுக்களின் மீது ஆணை பிறப்பித்தல்.
 • 2சி மரப்பட்டா மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.
 • புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை தல ஆய்வு செய்து சட்டரோதமாக மரம் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்தல்.
 • ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்குகளில் சட்ட விரோதமாக கல் மற்றும் மணல் தோண்டி எடுக்கபடுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
 • வருவாய் நிலை அணைகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல்.
 • ஆதின ஒழிப்பு இனாம் ஒழிப்புச் சட்ட காலங்களுக்கு அப்பார்பட்ட இனங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.
 • உப்பளம் அமைக்க நிலங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் குத்தகை வசூலித்தல்.
 • வட்டக் கணக்கு நடைமுறை நுல்படி பதிவேடுகள் மற்றும; கணுக்குகள் பராமரித்தல்.
 • ரயத்துவாரி நிலங்களில் உட்பிரிவு செய்து ஆணையிடுதல்.
 • அரசால் வாங்கப்பட்ட நிலங்களை விதிப்படி தீர்வு செய்தல்.
குற்றவியல் நிர்வாக பணிகள்:
 • வட்ட குற்றவியல் நடுவராக பணியாற்றுதல்.
 • வட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல்.
 • அவசர காலத்தில் இருப்புப் பாதையை கண்காணிக்க தக்க நடவடிக்கை எடுத்தல்.
 • குற்றவியல் நடைமுறை பிரிவு விதி 144ன் கீழ் ஆணை பிறப்பித்தல்.
 • கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தினை செயல்படுத்துதல்.
 • காவல் துரையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருட்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.
 • காவல் துறை அலுவலர்களின் கோரிக்கையின் பேரில் புதைக்கப்பட்ட பிணங்களை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவ ஆய்வு செய்தல்.

பொதுவான பணிகள் :
 • மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்துதல்.
 • பொதுத் தேர்தல் காலத்தில் சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலராகப் பணியாற்றுதல்.
 • சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நடந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தல்.
 • பொது சுகாதாரம் கால்நடை தொத்து வியாதி மற்றும் காலரா முதலிய இதர தொத்து வியாதிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தல் பிறப்பு இறப்பு பதிவு செய்யும் பணியைக் கண்காணித்தல்.

எனவே நமதூருக்கு இந்த சிறப்புகள், வசதிகள் கிடைக்க வேண்டும் என்றால் கீழே உள்ள சப்மிட் பட்டனை அழுத்தி அதிரை பிறையின் முதலமைச்சருக்கு மெயில் அனுப்பும் திட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்..

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...