அதிரையில் 110KV மின்நிலையம் கொண்டு வருவது யார்? திமுகவில் வெடித்த கோஷ்டி பூசல் - மக்கள் திண்டாட்டம்

Editorial
0
அதிரையில் நாள்தோறும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் அதிரையில் அறிவிக்கப்படாத மின் தடை தொடர்ந்து வருகிறது. மின் நிலையத்தை 110Kv ஆக தரம் உயர்த்தும் பணிகளுக்கு க்கிடையே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு மின் தடை செய்யப்படுகிறது.

கோடை காலத்துக்கு இணையாக தற்போது வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் மின் வெட்டு கூடுதல் தலைவலியாக மாறி உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகவே அதிராம்பட்டினத்தில் இரவு நேர மின் தடை தொடர்கிறது. 

புதன் கிழமை முழு நாள் மின் தடை செய்யப்பட்டது. ஆனால் செவ்வாய்கிழமையே அதற்கான ஒத்திகையை தொடங்கியதுபோல் பல முறை மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று முழு நாள் மின் தடை செய்யப்பட்ட மாலை பல பகுதிகளில் 5 மணிக்கு மின்சாரம் கிடைத்தது.

இருப்பினும் ஏஜே நகர் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு வரை மின்சாரம் வராததால் மக்கள் அவதியடைந்தனர். தினமும் பல முறை மின் தடை ஏற்படுவதுடன், குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக மின் கருவிகள் பழுதடைகின்றன.

இப்படி மக்களின் பாடு திண்டாட்டமாக இருக்க, அதிரையில் ஆளுங்கட்சியான திமுகவினரோ யார் 110KV மின் நிலையத்தை கொண்டு வந்தது என கோஷ்டிப்பூசலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தொடர்ந்து விவாதிக்கும் அவர்கள் தற்போது ஏற்படும் மின் வெட்டை தவிர்ப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லையே என ஆதங்கப்படுகிறார்கள் மக்கள்.Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...