ரெடியான அதிரையர்கள்.. பட்டுக்கோட்டை வரும் உதயநிதியிடம் சாலை பிரச்சனை பற்றி புகாரளிக்க முடிவு

Editorial
0
அதிராம்பட்டினம்: அதிரையில் சாலை பிரச்சனை தொடர்பாக பட்டுக்கோட்டையில் திருமண நிகழ்வுக்கு வரும் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களிடம் சாலை பிரச்சனை பற்றி புகாரளிக்க உள்ளதாக அதிரை நல்வாழ்வு பேரவையின் அறிவித்துள்ளது

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "அதிராம்பட்டினம் 12வது வார்டுக்கு உட்பட்ட  நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் சாலை பணிக்காக உடைக்கப்பட்ட தார் ரோடு அப்படியே கேட்பாரற்று விடப்பட்டு இருக்கிறது.

குண்டும் குழியுமான இச்சாசாலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இடறி விழுந்து காயங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை வார்டு உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலன் அளிக்காத காரணத்தாலும் வேண்டும் என்றே காலம் தாழ்த்தும் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம் பட்டுக்கோட்டைக்கு வருகை தரும் அமைச்சர் பெருமக்களை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம்.

மேலும் 20 ஆண்டுகாலமாக கிடப்பில் கிடந்த சாலையை உடைப்பில் போட்டு வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்களை கொண்டு நாளைய தினம் புகார் அளிக்கப்படும்." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...